
ஏமாற்றம்.
மெளனம் சுமந்த
குளத்தில் கல்லொன்று விழ
நிசப்தம் கலைந்தது
சப்திருந்த நீர்.
என்னுடையதான காதலையும்
காதல் சார்ந்த நினைவுகளையும்
சுமந்தபடி பிரகாசிக்கிறது
குளத்தங்கரை படிகள்.
என் தாத்தாவின் இறப்பின் போது
கரைத்த அஸ்தியின் சுவடுகளில்
தொனித்து தென்படுகிறது
குளத்தங்கரை சோகம்.
மகிழ்ச்சியின் விளிம்புகளையும்
சோகத்தின் எல்லைகளையும்
சுமந்த குளத்தங்கரையை காண்கையில்
இப்போதும் மகிழ்ச்சி கொள்ளும் மனம்.
குளத்து நீரில் மூழ்கி குளித்த நான்
நீண்டு நெடிந்த இடைவெளிக்கு பின்
அது சார்ந்த நினைவுகளில் மூழ்கி திளைக்க
எங்கிருந்தோ பறந்து வந்த
காகமொன்று தன் தாகத்தை
தீர்க்கும் பொருட்டு
குளத்தை எட்டிப்பார்க்க
வறட்சியுற்ற குளத்தைக் கண்டு
ஏமாந்தது காகம்
என்னுடன்......
No comments:
Post a Comment