
கோழிக் குழம்பு வாசனை
அதிகாலை தூக்கத்தை கலைத்த
எங்களின் விழிப்புகளுக்கெல்லாம்
உரித்தான சேவல் அறிந்திராது
அதன் வாழ்வின் இறுதி நாளை...
மூலைத்தெரு முனீஸ்வரனுக்கு
பலி கொடுக்கும் நாள்வரைக்கும்
சுற்றித்த்ரிந்ததென்னவோ
எங்களைத்தான்....
நிதர்சனப்பட்ட அதன் நினைவுகள்
மனக்கண்முன் ஓடிக்கொண்டிருக்க
பொங்கி வலிந்த
குருணை அரிசிச்சோற்றின் வாசனையிலும்
கொதித்து அடங்கிய கோழிக்குழம்பின் வாசனையிலும்
அடங்கிப் போனது
சேவலும் அது சார்ந்த நினைவுகளும்....
நன்றி : குங்குமம்
No comments:
Post a Comment