
உனதந்த அசைவு
வேறெப்போதும்
நிகழ்ந்திரா கணத்தினூடே
மெல்ல நெருங்கி வருகையில் விலகியபடி எத்தனிக்கிறது உனதுணர்வுகளை தாங்கிய காதல்.
இறுகப் பற்றிய கைகளின் வழியே கசிந்துருகும் பிரிவினைப்
புறந்தள்ளி மேலெழுகிறது நமதிடையேயான ஏக்கம்.
கரையாத் துயரம் சுமந்த
நாளொன்றை விலக்க முனைகையில்
நினைவு கூறும் பொருட்டு
துரத்தி துரத்தி
அல்லலுறச் செய்கிறது
நமதிடையே நிகழ்ந்த பிரிவு.
அரவமற்று திரியும் தவிப்புகளை நீக்கி
தொடரலாமென்ற நம்பிக்கையின் முனையில்
முனைத்தெழுகையில்
மெளனித்தபடி துளிர்கிறது
உனதிமையோரத்தில் நீர்.
No comments:
Post a Comment