Sunday, November 3, 2013

Thursday, September 26, 2013

பல்வேறு இதழ்கள் வெளியிட்ட எனது குழந்தைகளைத் தேடும் கடவுள் நூல் அறிமுகம் மற்றும் விமர்சனம் 


நன்றி - வடக்கு வாசல், இந்தியா டுடே, உங்கள் நூலகம், புன்னகை, பொதிகை மின்னல், தினத்தந்தி

நன்றி - அறிவே துணை, கவிஓவியா


நன்றி - கவிஞர், விமர்சகர் புதுவை வ. பழனி & புதுவை பாரதி இதழ்


நன்றி - பாவையர் மலர் , நம்பிக்கை வாசல்

Tuesday, September 24, 2013



நம்மை அறிந்தே
நாம் தொலைந்து போகிறோம்
காதல் உலகம்

Being well aware
We’ve lost…
The love-domain!

கற்கள் தேவையில்லை
நிதானம் கலைந்த
மனக்குளம்

Skip stones afresh
Quite immaterial…aye,
Mind-pool perturb’d!

தோப்பு தான்
ஆயின் தனிமரங்கள்
அடுக்கக் குடியிருப்பு

A grove; still
Trees all sparse…
The apartment system!

அறிவியல் தொலைக்காட்சி
விதைப்பதென்னவோ
ஜோதிடம் – வாஸ்து

Scientific television-
Colossal seedlings
Into astrology-vaasthu!

இலக்கியக் கூட்டம்
நரைத்த தலைகளே நிரப்பும்
காலி இருக்கைகள்

Literary hall-
Almost filled by grey heads
Whilst the rest, vacant!

பூதாகாரமாய் ஊருக்குள்
அலைபேசி கோபுரங்கள் மருண்டு
புலம்பெயர் பறவைகள்

Gigantic towers
Of spectrum; dreaded
Birds vacating town!

வளரத் துடிக்கும் வேர்கள்
வெட்டப்படும் வேதனை
தொட்டிச்செடி வாழ்க்கை

Roots so avaricious-
Since cut short
In fret, bonsai culture!

மூலநூல்             : கவிஞர் ச. கோபிநாத்
 “குழந்தைகளைத் தேடும் கடவுள் (2012)”
மொழியாக்க நூல்     : கவிஞர் அமரனின்
 “இருமொழிகளில் மூவாயிரம் தமிழ் ஹைக்கூ”

நன்றி                 : கவிஞர் அமரன்



Friday, September 13, 2013

சேலம் தாரமங்கலம் சாலையில் சர்கார் கொல்லப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவிற்கு அப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் என்னை சிறப்பு விருந்தினராய் அழைத்து சிறப்பு செய்த நெகிழ்ச்சியான தருணத்தின் பதிவுகள். 










Tuesday, September 3, 2013

Saturday, August 31, 2013


நம்பிக்கை வாசல் இதழ் மற்றும் நம்பிக்கை வாசல் அறக்கட்டளையின் முப்பெரும் விழாவில் வரவேற்புரை நிகழ்த்தும்போது ...


நம்பிக்கை வாசல் இதழ் மற்றும் நம்பிக்கை வாசல் அறக்கட்டளையின் முப்பெரும் விழாவில் எழுத்துச் செல்வர் லேனா தமிழ்வாணன் மற்றும் சிற்றிதழ் சங்க தலைவர் பூ. அ. இரவீந்திரன் ஆகியோரின் கரங்களால் "நம்பிகை நாவரசு" விருது பெறும்போது...

Friday, August 2, 2013

சமூக நலம் பயக்கும் நல்விதைகளை விதைக்கும் குழந்தைகளைத் தேடும் கடவுள்

கவிஞர் இரா.இரவி விமர்சனம்


'குழந்தைகளைத் தேடும் கடவுள்'
நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் 9790231240
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி 
வாசகன் பதிப்பகம் .11/96 சங்கிலி ஆசாரி நகர் .சன்னியாசி குண்டு
.சேலம் .636015. செல் 9944391668.



உயிரூட்டிய பெற்றோருக்கும் .அறிவூட்டிய ஆசிரியர்களுக்கும் இந்த நூலை காணிக்கை ஆக்கி இருப்பது சிறப்பு .பதிப்பாளர் கவிஞர் ஏகலைவன் பதிப்புரை ,அட்டைப்பட வடிவமைப்பு அச்சு ,உள் ஓவியங்கள் யாவும் மிக நேர்த்தி வாசகன் பதிப்பகத்தின் பெருமை மிக வெளியீடாக வந்துள்ளது .பாராட்டுக்கள் .இனிய நண்பர் ஹைக்கூ ஆய்வுக் கவிஞர் மு .முருகேஷ் ,பேராசிரியர் முனைவர் மித்ரா இருவரின் அணிந்துரையும் மிக நன்று
 .

'குழந்தைகளைத் தேடும் கடவுள் 'என்பதை விட 'கடவுளைத் தேடும் குழந்தைகள் 'என்றால் இன்னும் பொருத்தமாக இருக்கும் .குழந்தைகளிடம் கடவுளை வணங்கு என்று நாம் கற்பிக்கும்போது குழந்தைகள்தான் கடவுள் எங்கே என்று தேடுகின்றன .


நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் அவர்களுக்கு இந்த நூல் இரண்டாவது நூல் .சிறப்பான ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு நூல் இது.என்பதில் இரண்டாவது கருத்து இருக்காது. தொலைக்காட்சி தொல்லைக்காட்சியாகி விட்ட காரணத்தால் பார்ப்பதை பெரும்பாலும் தவிர்த்து வருகிறேன் .எப்போதாவது பார்த்தால் விஜய் தொலைக்காட்சியில் திரு ,கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா ? நானா ? நிகழ்ச்சி மட்டும் பார்ப்பதுண்டு .காரணம் .விழிப்புணர்வு விதைக்கும் விதமாக விவாதித்து வருகிறார் .நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் அவர்களும் நீயா ? நானா ?திரு ,கோபிநாத் போல எதிர் காலத்தில் புகழ் பெறுவார் .அந்த அளவிற்கு விழிப்புணர்வு விதைக்கும் விதமாக ஹைக்கூ வடித்துள்ளார் .


.அடுத்த வீட்டில் வசிப்பது யார் என்று தெரியாமலே அடுக்ககங்களில் வாழ்ந்து வருகின்றனர் .பழங்கால நேசம் ,பரிவு ,அன்பு ,மனித நேயம் இன்று இல்லை .அடுக்ககங்களின் அவலம் சுட்டும் ஹைக்கூ .

தோப்பு

தனிமரமானது 
அடுக்கக வாழ்க்கை !



ஓவியம் வரைதல் ,இசை இசைத்தல் ,பாடல் பாடுதல் ,மேடையில் பேசுதல் இப்படி பல்வேறு திறமைகள் இருந்தாலும் திருமனதிற்குப் பின் ' இல்லத்தரசிகள் 'என்ற பெயரில் பெண்களின் திறமை முழுவதும் வீணடித்து விடும் அவலம் உணர்த்தும் ஹைக்கூ .


அடிப்படிகளில் 
பொசுக்கப்படுகின்றன 
பெண்களின் திறமைகள் !



காதலை எழுதாத கவிஞன் இல்லை .காதலை எழுதாதவன் கவிஞன் இல்லை ..காதலை ஊறுகாய் அளவிற்கு கொஞ்சமாய் எழுதுவது நன்று .நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் அவர்கள் காதலைகொஞ்சமாய் எழுதியது சிறப்பு .


நம்மை அறிந்தே 
நாம் தொலையும் 
காதல் !


தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் இருந்தால் உண்மையில் வருந்துவார் .அறிவியல் கண்டுபிடிப்பில் மூட நம்பிக்கை முடை நாற்றம் வீசும் விதமாக தொலைக்காட்சியில் சோதிட நிகழ்சிகள் . எந்த வண்ணத்தில் சட்டை போட வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும் .ஆனால் நமது சட்டை வண்ணத்தை சோதிடர் சொல்வார் .என்ன கொடுமை இது .இந்த அவலத்தைக் கண்டிக்கும் ஹைக்கூ .

தொலைக்காட்சியில் சோதிடம் 

அறிவியல் விதைக்கும் 
மூட நம்பிக்கை!


.முன்பெல்லாம் கடைக்குச் செல்லும்போது கையில் பை எடுத்துச் செல்வோம் .இப்போது பலரும் பை எடுத்துச் செல்வதில்லை .நெகிழிப் பைகளே எங்கும் எதிலும் என்றாகி விட்டது .நெகிழிப் பையை தின்னும் விலங்குகள் இறந்து வருகின்றன .


தொண்டை நெறிக்கும் 
நெகிழிப் பைகள் 
அழியத் தொடங்கின விலங்குகள் !


குழந்தைகள் இருக்கும் வீடு என்பதற்கு அடையாளம் சுவரில் கிறுக்கல்கள் இருக்கும் . வாடகை வீடாக இருந்தால் வீட்டின் உரிமையாளர் பார்த்தல் வசை பாடுவார் .அவருக்குத் தெரியாது புரியாதுகுழந்தைகள் மனசு .


சுவரெங்கும் 
கிறுக்கல்கள் 
குழந்தைகளின் வீடு !



நம் நாட்டில் ஏவுகணைங்கள் ஏவுகின்றனர் .விரைவில் வல்லரசு ஆகப் போகிறோம் என்று மார் தட்டிக் கொள்கிறோம் .ஆனால் ஏழைகளின் வறுமை மட்டும் இன்னும் ஒழியவே இல்லை .அரசியல்வாதிகள் அவர் வறுமை அவர் மக்கள் வறுமை ஒழித்து வளமாகி பெரும் பணக்காரர்கள் ஆகி விட்டார்கள் .மக்களின் வறுமை மட்டும் அப்படியே தொடர்கின்றது .பலரின் வாழ்க்கை வீடு .


பாதசாரிகளே கவனம் 
சாலையோரம் 
வீடுகள் !

உலகில் உள்ள எல்லாக் கவிஞர்களின் பாடு பொருள் நிலா என்பது உண்மை .இவரும் நிலாவைப் பாடி உள்ளார்.


அதிகம் பாடப்பட்டும் 
அழகு குன்றவில்லை 
நிலா !


நிலவிற்கு அழகு குன்றவில்லை . கூடிக் கொண்டேதான் போகின்றது .
தந்தை பெரியார் இறுதி மூச்சு உள்ளவரை நம் நாட்டில் உள்ள மூட நம்பிக்கைகளை ஒழிக்க போராடினார் . ஆனால் இன்னும் மூட நம்பிக்கை .ஒழியவில்லை கணினி யுகத்திலும் காட்டுமிராண்டிப் பழக்கம் தொடர்வது வேதனை .



சாலையெங்கும் சிதறின 
எலுமிச்சைகளின் வடிவில் 
மூட நம்பிக்கைகள் !


இன்றைய திரைப்படப் பாடல்கள் கொச்சையாகவும் பச்சையாகவும் ஆங்கிலச் சொற்கள் கலந்தும் வருகின்றன .இதன் பொருள் தெரியாமலே குழந்தைகள் மனப்பாடம் செய்து விடுகின்றனர் .


முக்கியத்துவம் இழந்தது 
மனப்பாடச் செய்யுள் 
திரைப்பாடல் !


சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் விதமாக விழிப்புணர்வு விதைக்கும் விதமாக ஹைக்கூ கவிதைகள் எழுதி உள்ளார் ..நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .

நன்றி
கவிஞர் இரா இரவி

இவ்விமரசனத்தை இணையதளங்களில் வாசிக்க


வாசகர் சிந்தையில் எண்ண அலைகளை எழுப்பும் நூல்

கவிஞர் இரா. இரவி அவர்களின் பார்வையில் பட்டாம்பூச்சிகளின் கனவுகள் நூல் விமர்சனம்


நூல் ஆசிரியர் : சேலம்  கவிஞர் ச .கோபிநாத் 9790231240

நூல் விமர்சனம் : கவிஞர் இரா .இரவி

கலைவாணித் தமிழ்க் கூடம் .சி .எம் .சி .சாலை ,செஞ்சை .காரைக்குடி .விலை ரூபாய் 20. 



நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத் அவர்கள் பல்வேறு இதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளி .பல்வேறு பரிசுகளும் ,விருதுகளும் பெற்றவர் .ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்று ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்துக் கொண்டே தமிழ்ப்பணியும் செய்து வருவதற்கு பாராட்டுக்கள். இவரது ஹைக்கூ கவிதைகளை இதழ்களில் படித்து இருக்கிறேன் .மொத்தமாக முதல் நூலாகக் கண்டதில் மனம் மகிழ்ந்தது .மனம் திறந்த மடலுடன் நூல்களையும் அனுப்பி இருந்தார் .நூலின் தலைப்பே கவித்துமாக உள்ளது.

மூன்று அடி ,இரண்டு காட்சி .ஒரு வியப்பு ,மெல்லத் திறந்து இருக்கும் கதவு ,உணர்வு இலக்கியம் இப்படி ஹைக்கூ கவிதைக்கு பல்வேறு விளக்கம் சொன்னபோதும் ,படிக்கும் வாசகர்  .சிந்தையில் எண்ண அலைகளை எழுப்பி வெற்றிபெறுகின்றது .நூலின் முதல் ஹைக்கூ கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது .கடவுளின் பெயரால் , மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகளைக் கண்டிக்கும் விதமாக உள்ளது .

கோவில் வாசல்  
இரத்த சுவடுகள் 
அன்பே கடவுள் ?

பேருந்துகள் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு மிக வேகமாகச் .செல்கின்றன போட்டிப் போட்டு மிக வேகமாக ஓட்டும் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை  செய்யும் விதமாக உள்ள ஹைக்கூ நன்று .

முந்தி செல்லும் வாகனங்கள் 
முதலில் செல்கிறது 
ஓட்டுநர்கள் உயிர் !

நம் நாட்டில் கடவுள் திருவிழாவிற்கும் , கடவுளுக்கும் பஞ்சம் இல்லை .ஆனால் ஏழைகளின் பஞ்சம் தீர்ந்த பாடில்லை .தினந்தோறும் பெட்ரோல் விலை உயர்வு .அதன் காரணமாக விலைவாசிகள் உயர்வு .ஏழைகளின் வாழ்க்கையே பெரும் போராட்டமாகி வருகின்றது .என்பதை எள்ளல் சுவையுடன் உணர்த்தும் ஹைக்கூ நன்று .

வைகை ஆற்றில் அழகர் 
காவிரி ஆற்றில்  ரங்கன் 
நட்டாற்றில் மனிதன் ! 
.
ஹைக்கூ கவிதைகளில் வாசகர் மனதில் படிக்கும்போது காட்சிப்படுத்துதல் ஒரு உத்தி .அதனை சிறப்பாக கையாண்டு உள்ளார் .காட்சிப்படுத்தும் ஹைக்கூ நிறைய இருந்தாலும் பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .

கனத்த ஓசையுடன் 
வெடித்துச் சிதறும் பட்டாசுகள் 
படபடப்பாய் வண்ணத்துப் பூச்சி !

இந்த ஹைக்கூவை படித்து முடித்தவுடன் ,நம்மனகண்ணில் வண்ணத்துப் பூச்சி தோன்றி நமக்கும் படபடப்பு வருகின்றது .

இயந்திரமயமான உலகில் மனிதனும் இயந்திரமாகவே மாறி வருகிறான் .பாசம் ,நேசம் , அன்பு மறந்து வருகிறான் .பெற்றோர்களை பிரிந்து வாழ்கின்றனர் .திருமணம் ஆனவுடன் உடனடியாக தனிக்குடித்தனம் சென்று விடுகின்றனர் .அதனை உணர்த்தும் ஹைக்கூ .

குழைந்தைகள் மறந்தனர் 
யானைச்சவாரி 
முதியோர் இல்லத்தில் தாத்தாக்கள் !

மதுரையில் பிறந்து உலக அளவில் நாட்டியத்தில் சாதனை புரிந்து வரும் திருநங்கை நர்த்தகி நடராஜ் உள்பட பல திருநங்கைகள் வாழ்வில் சாதனை நிகழ்த்தி வருவதை உற்று நோக்கி வடித்த ஹைக்கூ ஒன்று மிக நன்று .

பிழையாய் பிறப்பு 
வளர்பிறையாய் வாழ்வு 
சாதிக்கும் திருநங்கைகள் !

'புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு' என்று அச்சடித்து இருந்தாலும் அதனைப் படித்துவிட்டு புகைக்கும் இளைஞர்கள் இருக்கின்றனர் .அவர்களின் சிந்தனைக்கு ஒரு ஹைக்கூ 

இரு விரல்களுக்குக்கிடையே 
ஒற்றைக் கால் எமன் 
வெண் சுருட்டு !

நம்நாட்டில் பாறைகளை வெட்டி  எடுத்து அயல்நாடுகளுக்கு அனுப்பி கொள்ளை அடிக்கின்றனர் .ஆற்றில் மணல்களை அள்ளி எடுத்து கடத்திக் கொள்ளை அடிக்கின்றனர் .தடுக்க முடியவில்லை .போட்டிப் போட்டு இயற்கையை அழித்து வருகின்றனர் .பொறுமையின் சின்னம் பூமி என்பார்கள் .அந்த பூமியே பொறுத்தது போதும் என்று பொங்கிய சினம்தான் சுனாமி .இதனை உணராமல் தொடர்ந்து இயற்கையை அழித்து வருகின்றனர் .

நொந்து போனது 
நொய்யல் ஆறு 
மணல் சுரண்டல் !

நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத் ஹைக்கூ பற்றி எழுதியுள்ள ஹைக்கூ நன்று .

பெருங்கடலாய் கருத்துக்கள் 
சிறுதுளியாய் வரிகள் 
ஹைக்கூ !

குழந்தைகளுக்கு இருக்கும் மனிதநேயம் பெரியவர்களுக்கு இருப்பதில்லை என்பதே உண்மை  என்பதை உணர்த்திடும் ஹைக்கூ .

வழிகாட்டும் குழந்தை 
சாலை கடக்கும் பார்வையற்றவர்கள் 
மலர்கிறது மனிதநேயம் !

உலகப்பொதுமறை வடித்த திருவள்ளுவர் பற்றி ஒரு ஹைக்கூ .

வாழ்க்கை பட்டறையில் 
புடம் போடும் கொல்லராய் 
குறள்  கொடுத்த வள்ளுவர் !
.
குடி கெடுக்கும் குடி பற்றி எழுதிய ஹைக்கூ குடிகாரர்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாக உள்ளது .

மதி மயக்கும் 
மது மயக்கம் 
வீணாகும் மனிதர்கள் !

 நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத் இயற்கையின் மீது பாசம் பற்று நேசம் மிக்கவர்என்பதைப் பறை சாற்றும் விதமாக உள்ள ஹைக்கூ .எள்ளல் சுவையுடன் உள்ளது .

காட்டுப் பாதையில் 
மனிதர்கள் நடமாட்டம் 
மரங்கள் ஜாக்கிரதை !

வளர்ந்து  வரும் படைப்பாளி கவிஞர் ச .கோபிநாத் அவர்களே  தொடந்து எழுதுங்கள் .வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள் .

நன்றி

கவிஞர் இரா.இரவி
மதுரை

இணையதளங்களில் உள்ள இவ்விமர்சனத்தை வாசிக்க