
கடிதம்
உன் கைவண்ணத்திலான
ஆயிரம் தகவல்களை பெற்றுவிட்டேன்
மின்னஞ்சல் வழியிலும்
அடிக்கடி அச்சுறுத்தும்
அலைபேசி வழி குறுஞ்செய்திகளிலும்......
எனினும், எவையும் உயிர்ப்பிக்கவில்லை
நமதான நட்பை
உன் கையெழுத்தைத் தாங்கிய
கடிதத்தைப் போன்று.....
- இனிய நந்தவனம். (பிப்ரவரி-2009)
No comments:
Post a Comment