குழந்தைகளைத் தேடும் கடவுள்
பார்த்த
உடனே கண்ணைக் கவரும் வகையில் மிக அழகான வடிவமைப்புடன் மிகச்சிறப்பாக நூலை வெளியிட்டுள்ளீர்கள்.
முதலில் அதற்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல ஓவியர் அன்பழகனின்
ஓவியங்கள் கவிதை நூலுக்கு ஒரு கண்ணியமான கனமான தோற்றத்தைத் தந்து நூலின் மதிப்பை இன்னும்
ஒரு படி மேலே உயர்த்துகின்றன.
உங்கள்
கவிதைகளை மொத்தமாக வாசிக்கும்போது சமூக உணர்வுள்ள சமூகத்தின் உயர்வுகளைப் போற்றியும்
இழிவுகளைக் கண்டித்தும் எழுகின்றா கவிதைக் குரலாகவே நான் காண்கிறேன். ஆங்கில ஆசிரியரான
தங்களது தீராத் தமிழ்தாகமும் தமிழுணர்வும் நூல் முழுவதும் விரவிக் கிடப்பதைக் காணும்போது
பிரமிப்பும் மகிழ்ச்சியும் ஏற்படுகின்றன.
செல்பேசி,
தொலைக்காட்சி போன்ற நவீனக் கருவிகளின் வருகை வாழ்க்கையை எளிமைப்படுத்திய போதிலும்,
இயற்கைச் சம நிலையையும் மென்மையான மன உணர்வுகளையும் அவை அழித்துவிட்டன என்பதைத் தங்களின்
அநேகக் கவிதைகள் பேசுகின்றன.
மழை
மாலை
எறும்புகளின்
குடையாயின
காளான்கள்
வானத்
தூரிகையின்
வண்ண
ஓவியம்
அந்திப்பொழுது
போன்ற கற்பனைகளின்
உள்ள நயமும்
கேட்பாரற்று
வீழ்கிறது
தேசத்தின்
எதிர்காலம்
போதையில்
இளைஞர்கள்
ஊருக்கு
வெளியே
சேரி
உயர்ந்த
சமூகம்
போன்ற கவிதைகளில்
மிளிரும் சமுதாய உணர்வும் தங்கள் கவிதைகளின் நேர்த்தியான கவித்துவத்துக்கு சான்றுகள்.
-
கவிஞர் வடுவூர் சிவ. முரளி, திருச்சி
எனது
“குழந்தைகளைத் தேடும் கடவுள்” நூல் குறித்து அவர் எழுதிய விமர்சனக் கடிதத்தில்…
No comments:
Post a Comment