நினைவலைகள்
மெல்லிய இருள் படர்ந்த
கறுத்த மேகத்திற்கிடையேயானதொரு பொழுதில்
இழையோடியபடியிருக்கும் எனதான தனிமை
மெளனித்திருந்த வேளையுடன்.
ஓயாமல் சிறகடிக்கும்
முடிச்சுகளிடையே உடலைத் தாங்கிய
தட்டான்களையொத்தபடி
தனித்த அறையொன்றின் வாயில் வழியே
பாய்ந்து தழும்பி வழியும்
உனதான அந்தரங்கங்களை
அறிய துடிக்குமென் ஆவல்கள்
வரம்புகளின் எல்லை கடந்து.
சிலிர்த்தெழ செய்யும் நியாபக சுவடுகளை
கட்டவிழ்த்தபடி கடக்கிறது
நேயத்தின் பொருட்டு காத்திருந்த
சினேகிதனொருவனின் அழைப்புகள்.
மேலெழும்பி அடங்குகிறது
காலத்தோடிணைந்த நினைவலைகள்
மழைநீர் படுதலின் விளைவாயு
கரையும் மண் மேடென....
Friday, February 13, 2009
Thursday, February 12, 2009
கனவுகளுடனான இரவுப்பொழுதுகள்
என் இரவுப்பொழுதுகள்.
பொறாமையுடனான
குரூரம் ததும்பியும்
நேயம் நிறைந்தும்
எத்தனிக்கின்றன அவை.
அச்சமுற செய்யும்
என்னுள் நிகழும் அக்கனவுகளை
விலக்க முனைந்து
தோல்வியுறுகிறேன்
இயலாமையின் வேடம் தரிக்கும் அற்பனென
கனவுகளின் பிரதிபலிப்பினூடே.
நன்றி : வடக்கு வாசல் (பிப்ரவரி 2009)
Monday, February 9, 2009

என்னுள்ளான நேசம்
முன்னெப்போதும் நிகழ்ந்திரா இக்கணத்தில்
என்னுள்ளுறைகிறது அவ்விருப்பம்.
தருணங்களனைத்திலும் கடிந்துகொண்டவாறே
நீண்டு நெடிந்தேயிருக்கிறது
எனதுள்ளத்தினுள் தாழிட்டுக்கொண்டும்
வெளிவர மறுத்தபடியும்
அடைக்காக்கும் அந்நேசம்.
பேரோசை எழுப்பியபடி அனுமானிக்கிறது
நடுங்கிப் பிளவுற்றிருக்கும்
எனதந்த மனதினுள்ளுயரும் புன்னகை நெருக்கடிக்குள்ளான பொழுதொன்றில்.
பிறிதொருவரின் கரம் அரவணைக்கத் தயாராயிருப்பதாய்
அழுகிய நாற்றமெடுக்கும் பிணமொன்றை முன்னிறுத்தி
கசகசப்பும் அருவருப்புமாய் உரூப்பெறுகிறது
வெளிக்காட்டாமலிருந்த பிறர்மீதான எனதந்நேசம்.
முன்னெப்போதும் நிகழ்ந்திரா இக்கணத்தில்
என்னுள்ளுறைகிறது அவ்விருப்பம்.
தருணங்களனைத்திலும் கடிந்துகொண்டவாறே
நீண்டு நெடிந்தேயிருக்கிறது
எனதுள்ளத்தினுள் தாழிட்டுக்கொண்டும்
வெளிவர மறுத்தபடியும்
அடைக்காக்கும் அந்நேசம்.
பேரோசை எழுப்பியபடி அனுமானிக்கிறது
நடுங்கிப் பிளவுற்றிருக்கும்
எனதந்த மனதினுள்ளுயரும் புன்னகை நெருக்கடிக்குள்ளான பொழுதொன்றில்.
பிறிதொருவரின் கரம் அரவணைக்கத் தயாராயிருப்பதாய்
அழுகிய நாற்றமெடுக்கும் பிணமொன்றை முன்னிறுத்தி
கசகசப்பும் அருவருப்புமாய் உரூப்பெறுகிறது
வெளிக்காட்டாமலிருந்த பிறர்மீதான எனதந்நேசம்.
Monday, December 15, 2008
Sunday, December 14, 2008
Subscribe to:
Posts (Atom)






